மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோரின் பெயர்கள் இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. நாட்டுக்காகச் சேவையாற்றுபவர்களைப் பாராட்டு விதமாக வழங்கப்படும் இந்த விருது இதுவரை 53 பேர் பெற்றுள்ளனர்.
கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, பொதுச் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் ‘பாரத ரத்னா’ விருது 1954-இல் அறிமுகமானது. வாழ்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தொடங்கப்பட்ட விருதளிப்பு, 1955-இல் மறைந்தவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.
ஓர் ஆண்டில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு 5 பேருக்கு வழங்கப்பட்டது.