மருத்துவப் படிப்பிற்கான மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:
மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள் இட ஒதுக்கீடுகள் பாதிக்கப்படும்.
இந்த தீர்ப்பில் அதாவது, எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடுகள் செல்லும் என்றும், வசிப்பிடம் ரீதியாக மாநிலத்தில் வாழ்பவர்களுக்கும் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட எந்த ஒதுக்கீடும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.