தளபதி திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டு களித்தனர்.
இயக்குநர் மணிரத்னம் – ரஜினி – மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது.
படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் அனைத்து பாடல்களும் இன்றுவரை ரசிகர்களின் விருப்பப் பட்டியலாக இருக்கிறது.
இதையும் படிக்க: விடுதலை – 2 படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் டிச. 12 ஆம் தேதி சில திரையரங்குகளில் மறுவெளியீடானது.
இதனை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டதுடன் ‘காட்டு குயிலு மனசுக்குள்ள’ பாடலை கோரசாக பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.