மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும் புத்ரா எனும் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்த தீ விபத்து நேரிட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை உயிர்ச் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அணுகுண்டு வெடித்துச் சிதறியது போன்று தீப்பிழப்பு கொளுந்துவிட்டு எரியும் காட்சி வெளியாகியிருக்கிறது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்திருக்கலாம் என்றும் அங்கிருந்து சமூக ஊடகங்களில் விடியோக்களுடன் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.