கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஜன. 30) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் கால்நடை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டது.