மிலாது நபி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

Dinamani2f2024 09 162f46kvht112fmodi Rahul.jpg
Spread the love

மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் திங்கள்கிழமை வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மிலாது நபி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிறை தென்படாததால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மிலாது நபி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-ஐ கடந்தது!

பிரதமர் மோடி வாழ்த்து

“மிலாது நபி திருநாளில் வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும்” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த அருமையான நாள், நம் இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி, மகிழ்ச்சி், இரக்கத்தை கொண்டு வரட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *