மீண்டும் விமர்சனங்களின் பிடியில் பாகிஸ்தான் அணி!

Dinamani2f2024 10 012ffc011g7y2fgytkj6hx0aa4afq.jpg
Spread the love

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அந்நாட்டின் ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சில மாதங்களாகவே பல்வேறு குழப்பங்கள் வலம் வந்த வண்ணமே இருக்கின்றன. அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சூழலில் பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

ரிஷப் பந்த் மிகவும் வேடிக்கையானவர்: ஆஸி. வீரர்

பத்திரிகையாளர் கேள்வி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்டதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பேன் எனக் குறிப்பிட்டீர்கள். உங்களுக்கு சுயமரியாதை மற்றும் கண்ணியம் என்பது கிடையாதா? தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் மோசமான செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டு நீங்கள் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவீர்களா? எனக் கேட்டார்.

பத்திரிகையாளரின் இந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய பாகிஸ்தானின் ஊடகப் பிரிவு இயக்குநர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் இங்கு அமர்ந்திருக்கிறார். நீங்கள் உங்களது கேள்விகள் எதுவாக இருந்தாலும் கேட்கலாம். ஆனால், இங்கு அமர்ந்திருப்பவர்களுக்கும் மதிப்பளித்து கேள்வி கேளுங்கள். தேவையற்ற கேள்விகள் கேட்பதை தவிர்த்து விடுங்கள் என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் எத்தனை தொடர்கள் உள்ளன தெரியுமா?

பாகிஸ்தான் மீது வெறுப்பு

பத்திரிகையாளரின் கேள்வி பாகிஸ்தான் அணியின் மீதான அதிருப்தியையே காட்டுகிறது. ஊடகங்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சர்ஃபராஸ் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்களின் அணுகுமுறையில் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனநிலையில் இந்திய அணி விளையாடுகிறது. தோல்வியடையும் மனப்பான்மையிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் வெளியே வரவேண்டும் என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகள்: சாதனைப் பட்டியலில் விராட் கோலி

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *