மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(டிச.20) காலை 3,004 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,266 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,004 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க |மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்த மண்பாண்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 118.94 அடியிலிருந்து 119.02 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 91.91 டிஎம்சியாக உள்ளது.