மேட்டூர் அணை நீர் திறப்பு 5,000 கனஅடியாக குறைப்பு | mettur dam water level

1339085.jpg
Spread the love

மேட்டூர் / தருமபுரி: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,790 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,992 கனஅடியாக குறைந்தது. அதேநேரத்தில், அணையில்

இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 8,000 கனஅடியிலிருந்து 5,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 106.10 அடியாகவும், நீர் இருப்பு 72.97 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10-ம் தேதி விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் 6,000 கனஅடியாகக் குறைந்தது. நேற்று நீர்வரத்து அளவில் மாற்றமின்றி, விநாடிக்கு 6,000 கனஅடியாகவே தண்ணீர் வந்துகொண்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *