மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் செயின்ட் வின்சென்ட்டின் கிங்ஸ்டவுனில் அமைந்துள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.