யமுனை நதி நீரைப் பருகிய ஹரியாணா முதல்வர்!

Dinamani2f2025 01 292fkl8wcn702fani20250129125630.jpg
Spread the love

யமுனை நதியில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டிய நிலையில், அந்நதி நீரை ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார்.

மேலும், மக்களிடையே அச்சத்தை விளைவிக்கும் வகையிலான கருத்துகளை கேஜரிவால் கூறிவருவதாகவும் சைனி விமர்சித்தார்.

தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்தார்.

கேஜரிவாலின் இத்தகைய கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இக்கருத்தைக் கூறியதற்காக கேஜரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் வழக்கு தொடுக்க நேரிடும் என ஹரியாணா அரசு எச்சரித்தது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரவிந்த் கேஜரிவால், ஹரியாணா மற்றும் தில்லி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், ஹரியாணா மாநிலம் பல்லா கிராமம் அருகே யமுனை நதியின் நீரை முதல்வர் நயாப் சிங் சைனி கையில் எடுத்துப் பருகினார். கேஜரிவாலின் கருத்தை பொய்யாக்கும் நோக்கத்தில் அவர் இவ்வாறு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் சைனி பேசியதாவது,

‘’அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துகளை அரவிந்த் கேஜரிவால் கூறுகிறார். அதனால் இன்று யமுனை நதியின் கிளையில் பாய்ந்தோடும் நீரைப் பருகினேன். ஹரியாணா அரசு யமுனை நதியில் விஷத்தை கலப்பதாக கேஜரிவால் கூறுகிறார். படுகொலைப் பற்றி பேசுகிறார். இப்பகுதியில் உள்ள நீரை பரிசோதித்துப் பார்த்ததில் விஷம் போன்ற ஏதும் கலக்கப்படவில்லை என நீர்வளத் துறை ஆணையம் கூறியுள்ளது. கேஜரிவாலின் குற்றச்சாட்டு ஹரியாணா மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிப்பதைப்போன்று உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *