ஆக்ஷன்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம், ரத்னம்.விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். யோகி பாபு, சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு விஷாலும் இயகுநர் ஹரியும் ரத்னம் படம் மூலம் மீண்டும் கைக்கோர்த்திருக்கின்றனர். ஒரு இளம் பெண்ணை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆக்ஷன் ஹீரோவின் கதையும், அந்த பெண் ஆபத்தில் இருப்பதற்கான காரணமும்தான் படத்தின் கரு. ஆந்திரா-தமிழ்நாடு பார்டரில் மிகப்பெரும் கொள்ளையுடன் படம் தொடங்குகிறது, அதை தொடர்ந்து வேலூரில் விஷால் எம் எல் ஏ சமுத்திரக்கனி அடியாளாக போலிஸ் தட்டிகேட்க வேண்டிய அநியாயங்களை தனி ஆளாக தட்டி கேட்கிறார்.
அப்போது ஒரு நாள் வேலூரில் ப்ரியா பவானி ஷங்கரை பார்க்க, அவர் இங்கு நீட் எக்ஸாக் எழுத வருகிறார். ஆனால், வந்த இடத்தில் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது.இதை அறிந்த விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை விஷால் கைக்கு வருகிறது, பிறகு என்ன விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை. படம் முழுவதும் ஆக்ஷன் அதகளம் செய்துள்ளார் விஷால்.ப்ரியா பவானி ஷங்கர் விஷால் அம்மா போலவே உள்ளதாள் அவரை காப்பாற்ற போராடும் கதை என்றாலும் அதில் பல பேஸ் ஸ்டோரிகளை வைத்து ஹரி தனக்கே உரிய ஸ்டைலில் விறுவிறுவென எடுக்க முயற்சி எடுத்துள்ளார். ஒரே ஊரில் தான் விஷால் அம்மா குடும்பம் உள்ளது ப்ரியா பவானி குடும்பமும் உள்ளது, அவர்களுக்கு தெரியாத உருவ ஒற்றுமை விஷாலுக்கு மட்டுமே தெரிந்தது கொஞ்சம் லாஜிக் பார்த்துயிருக்கலாம்.ஹரி படம் என்ன விறுவிறுப்பாக சென்றாலும், தொய்வு ஏற்படும் போது காமெடி,பாடல்கள் துணை நிற்கும், இதில் மிஸ்ஸிங்.