ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

Dinamani2f2025 03 112fbqrhiw3w2fafilephotoofpakistanarmysoldiers17417008611951741701101588.jpg
Spread the love

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் சென்ற ஜாஃபர் ரயில் மீது தாக்குதல் நடத்திய பலோச் பயங்கரவாத அமைப்பு, அதனை சிறைப்பிடித்து, அதிலிருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

பலோசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி 400 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் மீதே பலோச் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ரயில் ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்தப் பகுதியில் 17 சுரங்கப்பாதைகள் உள்ளன. மேலும் 8-வது சுரங்கப்பாதையில் இந்தக் கிளர்ச்சியாளர்களால் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளுக்குள் ரயில்களின் வேகம் பெரும்பாலும் மெதுவாக இருக்கும் என்பதைக் கணித்து கிளர்ச்சியாளர்கள் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்திற்கு சுதந்திரம் கோரி போராடும் பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு 20 வீரர்களைக் கொன்றதாகவும், ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலோச் மக்கள் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

ரயிலை தடம் புரளச் செய்து அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாக பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தலையிட்டால், அனைத்து பணயக்கைதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் பலோச் பயங்கரவாதக் குழு எச்சரித்துள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மக்களில் நிலை என்ன என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *