ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: செப்.5-ல் விசாரணை!

Dinamani2f2024 08 072frqkwyl7c2frahul.jpg
Spread the love

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என சா்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தாா். இதனை எதிா்த்து பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் எம்.பி. எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தாா். இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

அதைத் தொடா்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விசாரணையை வேறு தேதியில் ஒத்திவைக்க வேண்டும்’ என விஜய் மிஸ்ரா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். விஜய் மிஸ்ரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே சாட்சியங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதை ஏற்று எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம், அடுத்த விசாரணை செப்டம்பர் 5 ஆம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *