ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

Dinamani2f2024 08 262f55d5g5c62fp 3734986767.jpg
Spread the love

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .

இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம நவமி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ஒரு வாரக் காரத்திற்கு பிவாண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழைகள் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க இஸ்கான் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதர், நமது கோயிலைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்றும் விரும்பியவர். அதன்படி இந்தாண்டு ராமநவமியை முன்னிட்டு மாபெரும் அன்னதானத்திற்கு 5,000 ஆயிரம் கிலோ தானியங்கள், 2,000 கிலோ காய்கறிகள், 1,000 கிலோ சர்க்கரை, 500 லிட்டர் நெய் மற்றும் 300 கிலோ பழங்கள் பயன்படுத்தப்படும்.

பிவாண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் 1 லட்சம் சத்தான உணவுகள் சமைக்கப்படும். இஸ்கான் பிவாண்டியின் அன்னதானம் விநியோக செயல்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மிகப்பெரிய சைவ உணவு விநியோகத் திட்டமாக அங்கீகரிக்கப்படும் இஸ்கான் பிவாண்டியில் மார்ச் 2020 முதல் இதுவரை 33 லட்சத்திற்கும் அதிகமான இலவச உணவுகளை எழை மக்களுக்கு விநியோகித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *