பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை நெருங்கவுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், முதல் மூன்று நாள்களிலேயே உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.