மகாராஷ்டிர மாநில தாணேவில் பெற்றோரால் விற்கப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினரின் உதவியோடு குழந்தையின் பாட்டி பத்திரமாக மீட்டுள்ளார்.
தாணேவின் உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஜன.22 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையறிந்த, அவரது தாயார் தனது பேத்தியைக் காண மருத்துவமனைக்கு வந்தபோது அங்கு அந்த கைக்குழந்தையை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதப்பற்றி அந்த பெண் தனது மகனிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர் அந்த 6 நாளே ஆன அந்த பச்சிளம் குழந்தையை ரூ.90,000க்கு வேறொரு தம்பதிக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பணத்தை திருப்பி கொடுத்து குழந்தையை மீட்டு வருமாறு தனது மகன் மற்றும் மருமகளிடம் தொடர்ந்து கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பச்சிளம் குழந்தையை வாங்கியவர்கள் யாரென்று தெரியாததினால், வேறு வழியின்றி தனது பேத்தியை மீட்டு தருமாறு அந்த பெண் உல்ஹாஸ்நகர் மத்திய காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதையும் படிக்க: ஹிமாசலில் 2 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!