‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்க வேண்டாம்: நயன்தாரா அறிக்கை!

Dinamani2f2025 03 042fmawkyzry2fnayanthara Tnie.jpg
Spread the love

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான் என்றும், ஆனால் அவை வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து பிரிக்கக் கூடும் எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளதாவது,

”என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது.

வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் ரசிகர்களான நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இனிமேல் என்னை `நயன்தாரா’ என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது; ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் அது மட்டுமே குறிக்கிறது.

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, அடுத்தடுத்து விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து புகழ் பெற்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *