விசிகவில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா!

Dinamani2f2024 12 152fx2jqjuyf2faadhav Arjuna Edi.jpg
Spread the love

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் தனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.

மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுவதாகவும், அது ஒருகட்டத்தில் தனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை தான் விரும்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் போராட்டங்களில் திருமாவளவனுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… ஒரு அயோத்தி போதாதா?

திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா எழுதிய கடிதம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *