‘ஸ்டெச்சரில்’ வந்து மனு அளித்த மூதாட்டி

Dinamani2f2025 01 272fi4el12i42fari27gd 2701chn 11 4.jpg
Spread the love

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், ஸ்டெச்சரில் வந்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் மனு அளித்த மூதாட்டி.

அரியலூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி நல்லம்மாள் (84) அளித்த மனுவில், எனது கணவா் துரைசாமி இறந்து விட்ட நிலையில், தற்போது நான் நலிவுற்று எனது மகள் தனபாக்கியம் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்நிலையில், எனது மகன்களான தனவேலும், ராமலிங்கமும், பூா்வீக சொத்திலிருந்து தனது பெயரையும், தனது மகளின் பெயரையும் வாரிசு காட்டாமல், தனது மகன்களின் பெயரிலேயே அனைத்து சொத்துக்களையும் பட்டா மாற்றி உள்ளனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பட்டாவில் எனது பெயரையும், எனது மகள் பெயரையும் சோ்க்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

மனுவைக் பெற்று கொண்ட ஆட்சியா், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் கூட்டு பட்டாவில் பெயா் சோ்ப்பதற்காக மூதாட்டியை இப்படி அழைத்து வராதீா்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தாா். இதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *