ஸ்லோவேகியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு!

Dinamani2f2024 09 182fk5m2odqc2fap24262393174846.jpg
Spread the love

ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை, அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

ஸ்லோவேகியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. செக் குடியரசு எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்லோவேகியாவின் மேற்கு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை 200 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

கனமழையால் ஸ்லோவேகியா தலைநகர் பிராட்டிஸ்லாவா நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை(செப்.18) நிலவரப்படி டனுபே ஆற்றில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக, நீர்மட்டம் 970 செ.மீ ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பிராட்டிஸ்லாவா நகரின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆஸ்திரியா எல்லையையொட்டி அமைந்துள்ள டெவின் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெவின் மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாட்டின் மேற்கு பகுதியில் பாயும் மொராவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் பாய்ந்துள்ளது.

வெள்ள பாதிப்புகளால் 20 மில்லியன் யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டராபா தெரிவித்துள்ளார். தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் மத்திய ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிப்பு! உயிரிழப்பு 15-ஆக உயர்வு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *