தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு, பல்கலைக்கழகத்தின் 400 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்தது.
இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக உகாதி நாளன்று நிலம் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், நிர்வாகமும் தங்களுக்கு துரோகம் இழைத்ததாக பல்கலை மாணவர் சங்கம் குற்றம் சாட்டினர்.
பல்கலை வளாகத்தில் மாணவர்களின் நடமாட்டத்திற்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் மாணவர்கள் வகுப்பறைகளைப் புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பல்கலை ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் இணைந்த நிலையில் நிர்வாகம் மௌனம் காத்தனர். மேலும், நில எடுப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.