புதுதில்லி: நகை வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அதிகப்படியான கொள்முதல் காரணமாக புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.83,750 ஐ எட்டியது என்று அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய வர்த்தக அமர்வில் 99.9 சதவிகித தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.82,840 ஆக இருந்தது.
ஜனவரி 1 ஆம் தேதி 10 கிராமுக்கு ரூ.79,390 ஆக இருந்த தங்கம் 10 கிராமுக்கு 5.5 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.83,750 ஆக உள்ளது.
99.5 சதவீத தூய்மையான தங்கம் இன்று ரூ.910 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.83,350 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே வேளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.82,440 ஆக முடிவடைந்தது.