100-க்கும் மேற்பட்ட மாணவிகளின் சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி!

Dinamani2f2025 01 112fsem3v7eq2fdinamaniimport2023710originalschoolbagphoto1.avif.avif
Spread the love

ஜார்க்கண்ட்டில் பள்ளி விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பள்ளி மாணவிகளை சட்டையைக் கழற்றச் சொன்ன பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

ஜார்க்கண்ட்டில் தன்பாத் நகரில் உள்ள கார்மெல் பள்ளியில் பள்ளியின் கடைசி நாளைக் கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சட்டைகளில் வாழ்த்துகளை எழுதி கொண்டாடினர். இந்த நிலையில், பள்ளி நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும்விதமாக மாணவிகள் செயல்பட்டதாக பள்ளி முதல்வர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தங்கள் பள்ளி மாணவிகள் அழுக்கு உடைகளோடு வெளியில் செல்வதை விரும்பவில்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம், 100-க்கும் மேற்பட்ட 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் சட்டையைக் கழற்ற வற்புறுத்தியுள்ளனர். பள்ளி சென்ற மாணவிகள் வெறும் மேலாடையுடன் வீட்டுக்கு வருவதை அறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *