பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுடன் வாஹா படத்திலும் நடித்துள்ளார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ரன்யா ராவ் உரிய ஆவணங்கள் இல்லாத 14.8 கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.