இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர்!
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காயம் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Our Playing XI for #INDvENG
2️⃣ Changes in the side
Updates ▶️ https://t.co/6RwYIFWg7i#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/9Hnhhd2JIH
— BCCI (@BCCI) January 25, 2025
இங்கிலாந்து அணியிலும் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜேக்கோப் பெத்தேலுக்குப் பதிலாக அறிமுக வீரர் ஜேமி ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக பிரைடான் கார்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.