தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 20 வழித்தடங்களில் 48 சிறப்பு ரயில்களை 258 முறை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோட்டயம், மங்களூரு, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதுபோல் கேரளத்தில் இருந்து பெங்களூா், மும்பை, தில்லிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலிருந்து விசாகப்பட்டினம், சாந்தராகாச்சி, ஷாலிமா், தன்பாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல், வெளிமாநிலங்களில் இருந்து 70 ரயில்கள் தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிக்கு இயக்கப்படுகின்றன.