ஆஸ்திரேலியாவில் 98 கங்காருகளைக் கொன்ற 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள சிங்கள்டன் எனும் ஊரிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 98 கங்காருகள் கொல்லப்பட்டு கிடந்தன.
இதனையடுத்து, விசாரணை மேற்கொண்டு வந்த ஆஸ்திரேலிய காவல்துறையினர் சிங்கள்டனிலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள வில்லியம்டவுன் எனும் ஊரில் சோதனை நடத்தினார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை (டிச.20) நடத்தப்பட்ட அந்த சோதனையின்போது, 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் வீட்டிலிருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மீது விலங்குகளுக்கு தீங்கு விளைவித்தது, அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆயுதங்களை உபயோகித்தது, பாதுகாக்கப்பட்ட விலங்கை வேட்டையாடியது உள்ளிட்ட ஆறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.