டிராஃபிக் போலீஸ் வந்து முத்துவை கண்டிக்க, உடனே மீனா, “உங்களை யாரும் உதவிக்கு கூப்பிடல, அவர் என் புருஷன்” என்று சொல்ல முத்து காரில் சவாரி செய்தவர் அதிர்ச்சி அடைகிறார். சார் நீங்க சொன்ன அந்த பேய் மாதிரி பேசுற மனைவி இவங்க தானா என்று முத்துவை கோர்த்துவிட மீனா கோவமாக அங்கிருந்து கிளம்புகிறார்.
கோபமாகச் சென்ற மீனாவை சமாதானப்படுத்த முத்து கொசு வலையுடன் ஒரு நபரை வீட்டிற்கு அனுப்புகிறார். அந்த நபர் விஜயாவிடம் இந்த வீட்டு முதலாளியம்மா மீனாவை கூப்பிடுங்க என்று சொல்ல விஜயா கடுப்பாகி வழக்கம் போல ஹை பிட்சில் கத்துகிறார். கொசுவலை அடிக்க வந்த நபரிடம் கொசு வலையை பார்சல் போன்று பேக் செய்து கொடுத்து, அதன் மீதிருக்கும் ரிப்பனை வீட்டின் முதலாளியம்மா மீனா தான் திறக்க வேண்டும் என்று முத்து சொல்லி அனுப்பியது சிரிக்க வைக்கிறது.
அந்த நபர் கட்டிலை சுற்றி கொசு வலை அடித்து விட்டு செல்கிறார். இதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது.
அடுத்து வரும் எபிசோடுகளில் மீனாவை முத்து சமாதானம் செய்வாரா?, மனோஜிடம் வசமாகச் சிக்கியிருக்கும் ரோகிணி என்ன சொல்லி சமாளிக்க போகிறார்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த இரண்டு நாட்களாகச் சோகமான காட்சிகள் மட்டுமே வருகின்றன. கோபியின் அப்பா இறப்பு, அவருக்காக அழும் குடும்பம் எனக் கதை நகர்கிறது. சமீபத்திய எபிசோட்டில் கோபியின் அம்மாவுக்கு எதிராக ராதிகா கோர்ட் வரை சென்று பிரச்னைகள் பூதாகரம் ஆன போதிலும், வீட்டில் அனைவரும் சோகத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டு ராதிகா அனைவருக்கும் பணிவிடை செய்வது நற்பண்பை பிரதிபலிக்கிறது.
நேற்றைய எபிசோடில் ராதிகா கோபியின் அம்மாவுக்காக காபி போட்டு, அமிர்தாவிடம் கொடுக்கிறார். நான் கொடுத்த குடிக்க மாட்டாங்க, காலைல இருந்து அவங்க எதுவுமே சாப்பிடல, காஃபி ஆச்சு குடிக்கட்டும் என்று சொல்லி நெகிழ வைக்கிறார் ராதிகா. அதுமட்டுமின்றி ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கும் காபி கொடுத்தனுப்புகிறார்.
ராதிகாவின் கதாபாத்திரம் எப்போதுமே இரு முகங்களைக் கொண்டிருக்கும். மனித யதார்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம் அது. யாராலும் 100% நல்லவராகவும் 100% தீயவராகவும் இருக்க முடியாது. அனைத்தையும் சூழல் தீர்மானிக்கிறது.
சில பிரச்னைகளில் பாக்கியலட்சுமிக்கு ஆறுதலாக நிற்பது, இனியா மீது அக்கறை காட்டுவது எனப் பக்குவமாக நடந்து கொள்வார். இந்த இறப்பு நிகழ்விலும், கோபியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ததற்காக தன்னை ஒதுக்கிய ஒரு குடும்பத்தின் துயரத்தில் உடன் நிற்பது மனித இயல்பை பிரதிபலிக்கிறது.