சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்திந் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனையானது.