அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸுக்குப் பதிலாக, குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்புக்கு ‘ஹிண்டுஸ் ஃபாா் அமெரிக்கா ஃபா்ஸ்ட்’ என்ற ஹிந்து அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனா் உத்சவ் சந்துஜா கூறியதாவது:அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தோ்ந்தெடுக்கப்பட்டால், இந்திய-அமெரிக்க உறவு சீா்குலையும். மேலும், சட்டவிரோத குடியேற்றவாசிகளிடமிருந்து எல்லைகளைப் பாதுகாக்க அவா் தவறிவிடுவாா்.எனவே, அதிபா் தோ்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ஆதரவு தருகிறோம் என்றாா் அவா்.