அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்: இனி தங்கம் விலை உயருமா?

Dinamani2f2024 11 062f7x8bk5xm2ftrumpap24311287496455.jpg
Spread the love

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று, முதலீட்டாளர்கள் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்ட நிலையில், மற்றொரு பக்கம் தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்து வந்தது.

உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு காரணங்களால், கடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டில் மட்டும், தங்கம் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் விலை உயர்வைக் கண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவில், அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிய பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இது பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தங்கம் அதன் பளபளப்பை சற்று இழக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல்வேறு உலக நாடுகளிலும் பங்குச் சந்தைகள் பக்கம் முதலீட்டாளர்களின் உறுதியான பார்வை திரும்பலாம். இதனால், உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படும் தங்கத்தின் ஆதிக்கம் சற்று குறைந்து, பங்குச் சந்தைகளின் கை ஓங்கலாம். அதாவது, பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற நிலை ஏற்படும் போதுதான் தங்கம் விலை அதிகரிக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கணிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *