ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மரபுப்படி சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள் மூடல் | Chennai High Court gates closed

1340864.jpg
Spread the love

சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி, உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத் தின் அனைத்து வாயில்களையும் ஆண்டுக்கு ஒரு நாள் என்ற வகையில் மூடப்படும் என்று அறிவித்தது.

இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி நேற்றிரவு (நவ.23) 8 மணி முதல் இன்றிரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்று என்று உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் பி.ஹரி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *