ஆந்திரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

Dinamani2f2025 04 062f1pnexvba2fcapture.jpg
Spread the love

ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர்.

அல்லூரி சீதராம ராஜு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பர்தார் முன்னிலையில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்கள்.

சரணடைந்த 11 பேரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் 39 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பழங்குடியின இளைஞர்களுக்கு காவல்துறையினர் வழங்கிவரும் வேலைவாய்ப்புத் திட்டங்களும் தொலைதூர கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்துதருவது, மொபைல் போன் டவர்கள் அமைப்பது என உள்கட்டமைப்பு வசதிகள் அந்தப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்டதும் இவர்கள் சரணடைய காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சரணடைந்த நபர்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயனடையுமாறு வலியுறுத்திய காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | தேவாலயங்களைக் குறிவைக்கும் ஆர்எஸ்எஸ்: பினராயி விஜயன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *