வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
கடந்தாண்டு அக்டோபர் முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை.