இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று ஈரானைச் சேர்ந்த மத குரு மற்றும் மூத்த தலைவர் ஆயடொல்லா அலி காமேனேய் தெஹ்ரான் நகரில் திங்கள்கிழமை(செப்.16) பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தான் பேசிய கருத்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இஸ்லாமிய மதத்தின் எதிரிகள் நம்மை எப்போதும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இந்தியா, மியான்மர், காஸா அல்லது ஏதாவதொரு பகுதியில், ஒரு முஸ்லிம் பாதிப்புகளை எதிர்கொள்வதைக் குறித்து நாம் கண்டுகொள்ளாதிருந்தால், நம்மை நாம் முஸ்லிம்கள் என கருதிக்கொள்ள முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்