இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு முகமது ஷமி முழுவீச்சில் பந்துவீசத் தொடங்கியுள்ளார். பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடிய முகமது ஷமி, மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 19 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக அணியில் இடம்பெறாமலிருந்த முகமது ஷமி, பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.