இதற்கென விதிமுறைகளும் உண்டு
கர்ப்பிணிகளுக்கு இது ஒரு நல்ல அனுபவத்தைக்கொடுத்தாலும் கூட, இயற்கை பிரசவ முறையை தேர்வு செய்யும் கர்ப்பிணிகளுக்கு சில விதிமுறைகள் கட்டாயம். மருத்துவர்கள் அனைத்து விதமான மருத்துவ சோதனைகளையும் செய்து, ஒரு கர்ப்பிணி இயற்கை முறைக்கு உரியவரா, பிரசவத்தின்போது எந்த சிக்கலும் எழாதா? என்பது மட்டுமல்லாமல், சின்ன சின்ன பிரச்னைகள் மட்டுமே எழலாம் என்று உறுதி செய்யப்பட வேண்டும். அதாவது, கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில் ஹைப்பர்டென்ஷன், நீரிழிவு, நஞ்சுக்கொடி பிரிதல் போன்ற பிரச்னைகளை சந்திக்காமல் இருந்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், கர்ப்பிணியின் வயது, உடல் அமைப்பு, பெண்ணின் உடல்நலன், ஆரோக்கியம் போன்றவையும் கணக்கிடப்பட்டு இயற்கை பிரசவ முறைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
ஒருவேளை, நீரிழிவு மற்றும் கருப்பைக் கட்டிகள் இருந்த கர்ப்பிணியாக இருந்தால் கூடுதல் கவனத்துடன் இயற்கை முறையில் குழந்தைப் பேறுக்கு முயற்சிக்கலாம் என்கிறார் டாக்டர் ரெட்டி.
கர்ப்பிணி மட்டுமல்லாமல் கருப்பையில் இருக்கும் குழந்தையும் இயற்கை முறை குழந்தைப்பேற்றுக்கு தகுதியாக இருக்க வேண்டும். கருப்பையில் குழந்தை இருக்கும் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. பேறுகாலம் முழுமையடைந்து, குழந்தையின் தலை சுகப்பிரசவத்துக்கு தயார் நிலையில் இருப்பது போன்று கீழ்முகமாக இருக்க வேண்டும் என்கிறார் தில்லி மருத்துவமனை மகப்பேறு துறை இயக்குநர் டாக்டர் ஜூஹி ஜெயின்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வதன் மூலம், அபாயம் ஏற்படுவதைக் குறைத்து திடீரென சிசேரியன் செல்லும் நிலை தவிர்க்கப்படும் என்கிறார்.
“சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு அடைவதில் மக்கள் இடையே தேவையற்ற குழப்பங்கள் உள்ளது, ஆனால் அதில் உண்மையில் இல்லை. தற்போதைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை கோளாறுகளால் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இயற்கையான பிரசவத்தை சுகப் பிரசவம் போல அவ்வளவு எளிதாக யாராலும் நினைக்க முடியாது. சுகப் பிரசவம் என்பது தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதுதானே தவிர, பிரசவ முறையால் அதனை சுகப்பிரசவம் என்று வரையறுக்கக்கூடாது, எனவே, இயற்கை முறையில் பிரசவம் பார்ப்பதில் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதில்லை என்கிறார் மருத்துவர்.
100 சதவீதம் பாதுகாப்பானதா?
இயற்கையான பிரசவ முறை என்பது கர்ப்பிணிகளுக்கு மிகுந்த சௌகரியமான மற்றும் இயற்கையான பிரசவ கால அனுபவத்தைக் கொடுத்தாலும், இந்த முறையில் சில அபாயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த முறை ஒருவேளை பாதுகாப்பானதாகக் கூட இருக்கலாம், ஆனால், அதை உறுதிப்பட எல்லாவற்றுக்கும் ஒன்றாக சேர்த்து சொல்லிவிட முடியாது என்கிறார் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆஸ்தா தயால். ஒரு மகப்பேறு மருத்துவத்தைப் பொருத்தவரை, சிறிய பிரச்னை, பிரசவத்தில் எப்போதுவேண்டுமானாலும் மிகப்பெரிய பிரச்னையாக மாறலாம் என்கிறார். மருத்துவ சிகிச்சை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம். மருந்து, சிகிச்சையை விரும்பாத கர்பிணிகள், ஆரோக்கியமாக இருந்து, பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருந்தால் இயற்கை பிரசவ முறை மூலம் நல்ல அனுபவத்தைப் பெறலாம், ஆனால், நீரில் குழந்தைப் பேறு முறையை முயலும்போது, குழந்தையின் மூக்கு, வாய் போன்றவற்றில் தண்ணீர் நுழைந்து அதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.