இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள இந்திராபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் இவரது நண்பர் நவீன் குமார்(18).
இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று நடைபெறும் இந்திராபட்டி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் விழாவிற்கு புதிய ஆடை எடுப்பதற்காக நேற்று இரவு இலுப்பூர் வந்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தை பாலாஜி ஒட்டி உள்ளார். இவர்கள் ஒட்டி வந்த வாகனம் இலுப்பூர்-விராலிமலை சாலையில் உள்ள தனியார் எரிவாயு நிறுவனம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியது.