எங்கள் கனவு நாயகன் ஆசிர்வதித்தபோது… விஜய் புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

Dinamani2f2024 12 192f8sjmkiym2fgfgmbn8wqaauhho.jpg
Spread the love

நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனிடையே, கோவாவில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் – ஆண்டனிக்கு ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதையும் படிக்க : வதந்திகளை நம்பாதீர்கள்..! பிரபாஸ் பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

இந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக நடிகர் விஜய் கலந்து கொண்டது இன்று வரை பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் புகைப்படங்களை பகிர்ந்து, ”எங்களின் திருமணத்தில் எங்கள் கனவு நாயகன் கலந்து கொண்டு ஆசிர்வதித்தபோது.. அன்புடன் உங்கள் நண்பா, நண்பி” என்று கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, கிறிஸ்துவ முறைப்படியும் சுரேஷ் – ஆண்டனி தம்பதி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *