இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு குறு தொழில் முனைவோர் அமைப்பை இன்று துவக்கி வைத்துப் பேசிய டிஆர்பி ராஜா, “மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தியில் 30 சதவீதம் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ ) பங்களிக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபடும் நம் மாநிலத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் வரை அவர்கள் தலைமையில் செயல்படுகின்றன” என தெரிவித்தார்.
மேலும், “சிறு தொழில்களை ஆதரிக்கும் புதிய சிஐஐ திட்டத்தை தொடங்கும் இந்த நேரத்தில், புதிய தொழில்களையும், வேலை வாய்ப்புகளையும் மேம்படுத்தும் நமது அரசின் உறுதிப்பாட்டை தெரியப்படுத்திக் கொள்கிறேன். எம்.எஸ்.எம்.இ துறை மட்டும் மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தியில் 30 சதவீதம் மற்றும் ஏற்றுமதியில் 45 சதவீதம் பங்களிக்கிறது” என்றும் கூறினார்.