கத்திக் குத்து சம்பவம்: துணை முதல்வர் உதயநிதி காரை முற்றுகையிட்ட மருத்துவர்கள் | Doctors besieged Deputy Chief Minister Udayanidhi car

1339601.jpg
Spread the love

சென்னை: மருத்துவமனையில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இச்சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். கைதான இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதியாக வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

பின்னர் அங்கிருந்து உதயநிதி புறப்பட முயன்றபோது, அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அவரது காரை சூழ்ந்து முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உதயநிதியை அனுப்பி வைத்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே உதயநிதி தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். மருத்துவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு அரசு என்றும் பாதுகாப்பு அரணாக திகழும்” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *