ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நேற்று நிறைவு பெற்றது.
அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங். 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.