குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்நகரை தளமாகக் கொண்ட எச்ஆர்எம் & சன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் அரிசி மற்றும் சர்க்கரை ஏற்றப்பட்டிருந்தது.
தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கப்பலில் அரிசி அளவு அதிகமாக இருந்ததால் தீ மிகவும் மோசமாகி கடலின் நடுப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. எந்திர அறையில் பற்றிய தீ, விரைவாக மற்ற பகுதிக்கும் பரவியதாக கூறப்படுகிறது.