குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் காட்டிலும் 7611 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாலன்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையைப் பதிவு செய்தனர்.
காங்கிரஸ் – 29,687 வாக்குகளும், பாஜக 22076 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாஜகவை விட 7,611 வாக்குகள் முன்னிலையில் காங்கிரஸ் உள்ளது.
சுயேட்சை வேட்பாளர் மவ்ஜிபடேல் 8015 வாக்குகள் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக மொத்தம் 321 வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வருகின்றது.
நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 70. 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாவ் தேர்தல் மும்முனைப் போராட்டமாக மாறியுள்ளது.