கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி: ஜார்க்கண்ட் முதல்வர் சோரன்!

Dinamani2f2024 09 132f96xxfz5p2fdelhi Chief Minister Arvind Kejriwal With His Jhar1685729409865.a.jpeg
Spread the love

கேஜரிவால் விடுதலை உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் தெரிவித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு ஜாமீன்

கலால் கொள்கை ஊழல் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளார்.

கலால் கொள்கை ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை தொடர்ந்த ஊழல் வழக்கில் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (செப்.12) முன்ஜாமீன் வழங்கியது.

இதையும் படிக்க: தேசவிரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: கேஜரிவால்

ஜார்க்கண்ட் முதல்வர் எக்ஸ் தளப் பதிவு

இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளிட்டுள்ளப் பதிவில், “பொய்யையும், சூழ்ச்சியையும் வீழ்த்தி உண்மை வெற்றி பெற்றுள்ளது. அண்ணன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிறையில் இருந்து வெளியே வந்தார் கேஜரிவால்! கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு!

இடைக்கால ஜாமீன்

கடந்த மார்ச் 21 ஆம் தேதி பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் இருந்தபோது, ​​ஜூன் 26 அன்று கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பேரவைத் தேர்தல்கள்

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல்களில் களமிறங்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் ஒரு பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தில்லியில் ஆட்சியைத் தக்கவைக்கவும் ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.

இதையும் படிக்க: விராட் கோலிக்கு எதிரான சவால்களை மிகவும் விரும்புகிறேன்: மிட்செல் ஸ்டார்க்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *