கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு | Postponed to October 10th Kodanad case hearing

1377094
Spread the love

ஊட்டி: கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.

இது தொடர்​பாக சயான், வாளை​யாறு மனோஜ், சந்​தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகு​மார், ஜித்​தின் ஜாய், ஜம்​சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், இந்த வழக்கு விசா​ரணை மாவட்ட மகளிர் நீதி​மன்ற நீதிபதி எம்​.செந்​தில்​கு​மார் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. குற்​றம் சாட்​டப்​பட்​டோர் யாரும் ஆஜரா​காத நிலை​யில், அரசு வழக்​கறிஞர்​கள் ஷாஜ​கான், கனக​ராஜ் மற்​றும் சிபிசிஐடி போலீ​ஸார் மட்​டும் ஆஜராகினர். இதையடுத்​து, வழக்கு விசா​ரணையை அக். 10-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​து நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *