சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் | Former President Ram Nath Kovind speech in chennai

1377294
Spread the love

சென்னை: ​நாட்​டின் சிறந்த நிர்​வாகத்​துக்கு குடிமைப் பணி​யாளர்​கள் தான் முது​கெலும்பு என்று கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் புதிய வளாகம் திறப்பு விழா​வில் முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் தெரி​வித்​துள்​ளார்.

கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் 12-வது ஆண்டு தொடக்க விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் கலந்​து​கொண்​டு, சென்னை அண்ணா நகர் மற்​றும் தஞ்​சாவூரில் கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் புதிய வளாகங்​களை திறந்து வைத்​தார்.

இந்த நிகழ்ச்​சிக்கு கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாட​மி​யின் நிறு​வனரும், இயக்​குநரு​மான எம்​.பூமி​நாதன் தலைமை வகித்​தார். தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் முன்​னிலை வகித்​தார். நிகழ்ச்​சி​யில் முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் பேசி​ய​தாவது: 12 ஆண்​டு​ வெற்றிப் பயணம் நான் சிறு​வ​னாக இருந்​த​போது,தமிழக முன்​னாள் முதல்​வர் காம​ராஜரை ‘கிங் மேக்​கர்’ என்று பலரும் கூறு​வதை கேள்​விப்​பட்​டுள்​ளேன்.

அந்த வகை​யில், பல வெற்​றி​யாளர்​களை உரு​வாக்​கும் பயணத்​தில் 12 ஆண்​டு​களை வெற்​றிகர​மாக கடந்​திருக்​கும் கிங் மேக்​கர்ஸ் அகாட​மிக்கு எனது வாழ்த்​துகள். இன்று தொடங்​கப்​பட்​டுள்ள இந்த புதிய வளாகங்​கள் வெறும் செங்​கல், கம்​பிகளால் ஆன கட்​டு​மானம் மட்​டுமல்ல. இது நமது இளைஞர்​களின் கனவு​கள், உறு​தியை வளர்ப்​ப​தற்​கான இடம். இந்த இளைஞர்​கள்​தான் குடிமைப் பணி​களில் சேர்ந்து அர்ப்​பணிப்​பு, நேர்​மை​யுடன் நம் நாட்​டுக்கு மகத்​தான சேவையை வழங்​கு​கின்​றனர்.

கிராமப்​புற பின்​னணி​யில் உள்ள இளைஞர்​கள், சமூகம் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய நிலை​யில் உள்ள மாணவர்​களுக்கு கிங் மேக்​கர்ஸ் அகாடமி அதிக அளவில் வாய்ப்​பளித்து கல்வி கற்​பித்து வரு​வது பாராட்​டுக்​குரியது. இந்த அகாடமி நம் இளைஞர்​களுக்கு சிறந்த கல்வி அறிவை மட்​டுமின்​றி, நாட்​டில் சிறந்த திறமை​சாலிகளு​டன் போட்​டி​யிடு​வதற்​கான நம்​பிக்​கை​யை​யும் வழங்​கு​கிறது.

கடந்த 12 ஆண்​டு​களில் 100-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களுக்கு கிங் மேக்​கர்ஸ் அகாடமி வழி​காட்டி இருக்​கிறது. குறிப்​பாக, அகில இந்​திய அளவில் முதலிடம் பிடித்த 2 பேரை​யும், தமிழக அளவில் முதலிடம் பிடித்த 5 பேரை​யும் இந்த அகாடமி உரு​வாக்​கி​யுள்​ளது. தேசத்தை கட்​டி​யெழுப்ப இது​போன்ற பங்​களிப்​பு​கள் முக்​கிய​மானவை. நமது நாடு பன்​முகத்​தன்மை கொண்​டது. எண்​ணிலடங்கா மொழிகள், கலாச்​சா​ரத்​தைக் கொண்​டுள்​ளது. அதற்கு ஏற்ப, அனைத்து சமூக மக்​களின் தேவை​களை​யும் புரிந்​து​ கொண்டு சேவை​களை வழங்​கு​வது அவசி​யம். நாட்​டின் ஒற்​றுமைக்​கும், சிறந்த நிர்​வாகத்​துக்​கும் முது​கெலும்​பாக குடிமைப் பணி​யாளர்​கள் திகழ்ந்து வரு​கின்​றனர்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் பேசும்​போது, “கிங் மேக்​கர்ஸ் அகாடமி கடந்த 12 ஆண்​டு​களாக தொடர்ச்​சி​யாக வளர்ச்​சி​யடைந்து தரமிக்க, திறமைமிக்க, நேர்​மை​யான குடிமைப் பணிஅதி​காரி​களை உரு​வாக்​கி​யுள்​ளது. இவர்​கள் சட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தி​லும், மக்​களுக்கு பல்​வேறு அரசு நலத் திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தி​லும் முக்​கிய பங்கு வகிக்​கின்​றனர். திறமை​யான நிர்​வாகத்​துக்கு குடிமைப் பணி ஊழியர்​கள்​தான் முக்​கிய​மான தூண்​கள்” என்​றார்.

அகாட​மி​யின் நிறு​வனர் பூமி​நாதன் பேசும்​போது, “கிங் மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி 12-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. இந்த வேளை​யில், ‘நாங்​கள் கற்​பிக்​கிறோம், நீங்​கள் முன்​னேறுங்​கள்’ என்ற வகை​யில் இளம் மனங்​களை, குறிப்​பாக கிராமப்​புற பின்​னணி​யில் இருந்து வரும் மாணவர்​களை வளர்த்​து, அவர்​களை அர்ப்​பணிப்​புள்ள குடிமைப் பணி ஊழிய​ராக மாற்​று​வதற்கு ஒரு சூழலை உரு​வாக்​கும் எங்​களது இலக்கை நோக்​கிய பயணத்​தின் முக்​கிய அடிக்​கல்​லாக தற்​போது புதி​தாக திறக்​கப்​பட்​டுள்ள இந்த வளாகங்​கள் தி​கழ்​கின்​றன” என்​றார். இந்த நிகழ்​வில் கிங் மேக்​கர்​ஸ்ஐஏஎஸ் அகாட​மி​யின் துணை நிறு​வனர் சத்யஸ்ரீ பூமி​நாதன்​,கவுர​வ ஆலோ​சகர்​ விவேக்​ ஹரி​நா​ராயணன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *