செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு!

Dinamani2f2024 072f116f3bdb Dd56 4093 80a9 9b0f3537fc5d2fa Senthil Baa.jpg
Spread the love

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது கடந்த ஜூலை 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், ‘வங்கித் தொடா்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளன. எனவே, எங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும். வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் எங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராயக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கு இன்று(ஜூலை 18) விசாரணைக்கு வந்த நிலையில், “விசாரணையை நீண்டகாலம் இழுத்தடிக்கும் நோக்கில் இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தாக்கல் செய்கிறார் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *