சென்னை விமான நிலைய சுங்க முதன்மை ஆணையராக தமிழ்வளவன் நியமனம் | Tamilvalavan Appointed as Customs Chief Commissioner at Chennai Airport

1357132.jpg
Spread the love

சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக தமிழ்வளவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை முதன்மை ஆணையராக இருந்த ரமாவத் சீனிவாச நாயக், ஜிஎஸ்டி பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, இப்பிரிவில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேசிய சுங்கம், மறைமுக வரிகள், போதைப் பொருள் கட்டுப்பாடு அகாடமியின் கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த எம்.ஜி. தமிழ்வளவன், பதவி உயர்வு மூலம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை புதிய முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இது வழக்கமாக பணியிட மாற்றம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *